டலோர கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

டலோர கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

புதன்கிழமை, ஜனவரி 27,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளைப் போல கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேகொண்ட முதலமைச்சருக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு நேரிட்ட சுனாமி பேரழிவால், நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக, கடலோர கிராமங்களை உள்ளடக்கி அனைத்து பகுதிகளுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக கடந்த 2013ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனை தாயுள்ளத்துடன் பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடலோர கிராமங்களில் உள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, அனைத்து பகுதிகளிலும் சிறிய அளவிலான சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக அமைக்க உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, செல்லூர், தெத்தி, சுனாமி குடியிருப்பு, வானகிரி, தென்னாம்பட்டினம் உள்ளிட்ட 44 கடலோர கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வேளாங்கன்னி பேரூராட்சி பகுதிகளிலும் சிறிய அளவிலான சுக்திகரிப்பு நிலையங்கள் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து கிராம மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீரை பயன்படுத்தி நாளொன்றுக்கு 5 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வரும் சிறிய அளவிலான நிலையங்களின் பராமரிப்பு பணி, மகளிர் சுயஉதவி குழுவினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உப்பு மற்றும் வேதியப் பொருட்கள் அறவே நீக்கப்பட்டுள்ள குடிநீர், நாள்தோறும் தட்டுப்பாடின்றி வழங்குவதால் மகிழ்ச்சியடைந்துள்ள நாகை மாவட்ட கடலோர பகுதி மக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.