டெங்கு மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க, தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடவடிக்கை – வைரஸ் காய்ச்சலைத் தடுக்க, மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாக, ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை

டெங்கு மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க, தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடவடிக்கை – வைரஸ் காய்ச்சலைத் தடுக்க, மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாக, ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் வைரஸ் காய்ச்சலுக்காக ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் விலையில்லா நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் வைரஸ் காய்ச்சலுக்காக ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த, மாணவ-மாணவியரின் பேரணியை அமைச்சர் திரு. B.V. ரமணா தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில், 450-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், குக்கிராமங்களுக்குச் சென்று, கொசு ஒழிப்பு, டெங்கு தடுப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகள், அம்மா உணவகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காடு, ஆண்டிபாளையம், சிண்ணாடி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளித்தல், மருத்துவ முகாம்கள் அமைத்தல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 11 ஒன்றியங்களிலும், சுகாதாரத்துறை சார்பில், ஊராட்சிமன்ற தலைவர்கள், செயலாளர்கள், வறுமை ஒழிப்பு குழுக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகியோருக்கு, பயிற்சி மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது.