முதலமைச்சர் உத்தரவுப்படி,டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

முதலமைச்சர் உத்தரவுப்படி,டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

செவ்வாய், டிசம்பர் 22,2015,
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மழைக்கால தொற்றுநோய் பரவாமல் இருக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆவின் நிறுவனம் மற்றும் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதோடு, நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட சித்த மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே விழுப்புரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை சார்பில் மூலிகை கண்காட்சி மற்றும் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இக்கண்காட்சியில் சீமை அகத்தி, மலைவேம்பு, நிலவேம்பு, துத்தி உள்ளிட்ட 75 வகையான மூலிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.