தனியார் நிறுவன தீ விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தனியார் நிறுவன தீ விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய்கிழமை, பிப்ரவரி 16, 2016,

தனியார் நிறுவன தீ விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோயம்புத்தூர் மாவட்டம், ஓராட்டுக்குப்பை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அப்போது பணியிலிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த குணால், தருண், பிரித்தம், பிக்காஷ், பிரிஜுன், சரோஜ் ஆகிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

,