தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நன்றி

தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நன்றி

வியாழன் , ஜூன் 02,2016,

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாகர்கோவிலில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோன்ற முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க, தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், அரசு துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வsருகின்றன. மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், பதிவு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டும், வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாகர்கோவிலில் நேற்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் வருகை தந்து, 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்தனர். இந்த முகாமில் 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். இதுபோன்ற முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.