தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

புதன்,ஜனவரி 11,2017,

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்று தமிழக முதல்வர்  ஓ .பன்னீர்செல்வம்   தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர்  ஓ .பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும். அதனை தமிழக அரசு உறுதி செய்யும். ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவிலிருந்து எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்.அதேநேரம் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்ற இயலாது. அவ்வாறு 2009-ல் திமுக கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழக அரசால் தனியாக சட்டம் இயற்ற முடியாது.இருந்தாலும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை நிலைநிறுத்த உறுதியாக செயல்படுவோம்.

இவ்வாறு முதல்வர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.