தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

புதன் , பெப்ரவரி 24,2016,

தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 21 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கிராமத்தைச் சேர்ந்த திரு. தாமஸ் ஞானராஜ் என்பவரின் மகன் ஜெஸ்டின் ஜெபதாஸ், மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மகேஷ், நாகர்கோவில் நகரைச் சேர்ந்த திரு. ராஜய்யா என்பவரின் மனைவி பூமாடத்தி, திரு. ஆரோக்கிய டொமிக் ராஜ் என்பவரின் மனைவி ரேவதி ராணி மற்றும் களியக்காவிளை குருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. தங்கையா என்பவரின் மனைவி திரேசம்மாள்;

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், கண்டமேட்டு காலனியைச் சேர்ந்த திரு. சோமு என்பவரின் மனைவி வேலம்மாள்;

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி சிவகங்கை மாவட்டம், கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு. போஸ் என்பவரின் மகன் சுரேஷ்;

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி கரூர் மாவட்டம், பொய்யாமணி கிராமத்தைச் சேர்ந்த திரு. பழனி என்பவரின் மகன் மோகன்; சிவகங்கை மாவட்டம், விசாலயன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. கணபதி என்பவரின் மகன் பாண்டியன், கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. முத்துராம் சிறுபாலை என்பவரின் மகன் தியாகராஜ்;

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி, கடலூர் மாவட்டம், பல்லவராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கலியபெருமாள் என்பவரின் மனைவி நாகம்மாள்;

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரத்தைச் சேர்ந்த திரு. மாரியப்பன் என்பவரின் மகன் ராமர்;

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி கரூர் மாவட்டம், இனாம் கரூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. பெருமாள் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன், பாலாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த திரு. சுந்தர்ராஜ் என்பவரின் மகன் சங்கர் தயாளன்;

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி, தேனி மாவட்டம், டி.சிலுக்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த திரு. பவுன்ராஜ் என்பவரின் மகன் முரளிதரன், கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. மகாலிங்கம் என்பவரின் மனைவி மாரியம்மாள், சக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. சொக்கலிங்கம் என்பவரின் மகன் மீனாட்சிசுந்தரம், டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்புக்காளை என்பவரின் மனைவி வேல்தாய் மற்றும்;

மதுரை மாவட்டம், ரெங்கசாமிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. சந்திரன் என்பவரின் மனைவி விஜயா; தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரைச் சேர்ந்த திரு. ஆனந்தராஜ் என்பவரின் மகன் ஸ்ரீராம் மற்றும் திரு. தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் சரவணன் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.