தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 9-ம் தேதி கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விசூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. உத்தரவேல் என்பவரின் மனைவி வாசுகி, மகள் கௌசல்யா, செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த திரு. பச்சையப்பன் என்பவரின் மகன் அசோக் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சிவசங்கரன் என்பவரின் மனைவி செல்வி, திரு. வீரமணி என்பவரின் மகன் சிவா, திரு. வீரன் என்பவரின் மனைவி செல்வி, மகன்கள் மாரிமுத்து, பெருமாள், வீரமுத்து, மகள் பவானி, திரு. சிவசங்கர் என்பவரின் மகன் தினேஷ், திரு. சிங்காரவேல் என்பவரின் மகன் நடேசன், திரு. சிவசங்கர் என்பவரின் மகள் பிச்சையம்மாள், குறிஞ்சிப்பாடி நகரத்தைச் சேர்ந்த திரு. ரத்தினம் என்பவரின் மனைவி உதயகுமாரி, பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த திரு. மாணிக்கவேல் என்பவரின் மகள் பூமிகா ஆகியோர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கடந்த 9ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், குடிமியாண்டிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த திரு. சந்திரசேகர் என்பவரின் குழந்தை பவித்ரா; திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பச்சிரத்தான் என்பவரின் மகன் நாயகம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீரதனகிரி கிராமத்தைச் சேர்ந்த திரு. பாலமுருகன் ஆகியோர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஜீவா என்பவரின் மகன் அரிகிருஷ்ணன் மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Tags: Latest News