திமுகவினர் செய்த தவறை மக்கள் மறக்கவில்லை,வரும் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெரும் :எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

திமுகவினர் செய்த தவறை மக்கள் மறக்கவில்லை,வரும் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெரும் :எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

திங்கள் , ஜனவரி 18,2016,

திமுகவினர் செய்த தவறை மக்கள் மறக்கவில்லை,வரும் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெரும் என்று எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆரின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கடந்தமுறை ஆட்சியிலிருந்த போது மக்களின் ஜீவதார பிரச்சினைகளை தீர்க்காத திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராக நினைப்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.எதிர்க்கட்சிகள் வாக்கு சதவீத கணக்கு போட்டு எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் ஆட்சிக்கு வரமுடியாது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் விடியல் மீட்பு பயணம் ஒரு நாடகம் என மக்கள் உணர்ந்திருப்பதாகக் கூறிய பன்னீர்
செல்வம் வாக்குவங்கி கணக்குகளை வைத்து எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் என்றார்.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் இயக்கமான அ.இ.அ.தி.மு.க.-வுக்கு வெற்றிக் கனியை இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலிலும் பரிசளிக்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.