தமிழகத்தில் 14 லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி நன்றி

தமிழகத்தில் 14 லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி நன்றி

செவ்வாய், ஜனவரி 19,2016,

தமிழகத்தில் 14 லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் மழை நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி நன்றி தெரிவித்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அதன் செயலாளரும், அமைச்சருமான திருமதி பா. வளர்மதி தலைமையில், தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், நான்கரை ஆண்டு கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, கழக அரசின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கரும்பு டன்னுக்கு 2,850 ரூபாய் உயர்த்தி வழங்கியது, விழுப்புரம் தெற்கு, நாமக்கல், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கழக அலுவலகங்களை திறந்து வைத்ததுடன், அங்கு எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரையை ஆண்டு திருமலை நாயக்கர் மன்னரின் நினைவைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான தைப்பூசத் திருநாள் அன்று, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், அதன்படி, வரும் 24-ம் தேதி மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா, அரசு சார்பில் மதுரையில் கொண்டாடப்படும் என்று உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கழக இலக்கிய அணி பாராட்டு தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 14 லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியதற்காகவும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கழக இலக்கிய அணி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திரு.ப. மோகன், திருமதி எஸ்.கோகுல இந்திரா, திரு. R.B. உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. அ. தமிழ்மகன் உசேன், அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.