தமிழகத்தை மின்மிகை மாநிலம் ஆக்கினார் முதல்வர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

தமிழகத்தை மின்மிகை மாநிலம் ஆக்கினார் முதல்வர் ஜெயலலிதா:    ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

புதன், பெப்ரவரி 17,2016,

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை, முதல்வர் ஜெயலலிதாவையே சாரும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அப்போது தற்போதைய அரசின் சாதனைகளாக அவர் தன் உரையில் வெளியிட்ட பட்டியல்:

* 5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

* இலங்கை பிரச்சனையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கப்பட்டது.

* முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை.

* முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தமிழகத்தில் வளர்ச்சி விகிதம் 8.01% எட்டியது.

* பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

* அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி

* ஏழைகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள்

* அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் விலையில்லா மின்விசிறிகள், மிக்சிகள் மற்றும் கிரைண்டர்கள்

* அரசு மற்றும் அரசின் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

* 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக இரட்டிக்கப்பட்ட மாதாந்திர சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை

* இரட்டிப்பாக்கப்பட்ட ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித்தொகையுடன், திருமாங்கல்யத்திற்குத் தங்கம்

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் இரட்டிக்கப்பட்ட உதவித் தொகை

* பொது மக்கள், அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கென, விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

* கணிசமாக உயர்த்தப்பட்ட விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித்தொகை

* தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்ட உயர்கல்வி உதவித்தொகை

* பள்ளி மாணவர்களுக்கு, நான்கு சீருடைத் தொகுப்புகளுடன் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை போன்ற விலையில்லா கல்வி உபகரணங்கள்

* கிராமப்புற ஏழைகளுக்கு மூன்று இலட்சம் பசுமை வீடுகள். இவற்றுடன், நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள், பேரூராட்சிகளில் வாழும் வீடற்ற குடும்பங்களுக்கு 20,000

* முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டம்·

* மாநிலத்திற்குள் காணப்படும் சமூகப் பொருளாதார இடைவெளியைக் குறைக்க, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம்

* கிராமக் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும், சிறப்பான முன்னோடித் திட்டமான தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்

* நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, சென்னைப் பெருநகர வளர்ச்சி இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்பகுதி வளர்ச்சி இயக்கம் போன்ற பெருந்திட்டங்கள்

* மாநிலத்தில் முதன்முறையாக, சிறப்பான முறையில், வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு

*விவசாயிகளையும் நுகர்வோரையும் நேரடியாக இணைப்பதற்காக 71 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்

·* பொருட்களை வாங்கி அடக்க விலையில் விற்பதற்காக 100 கோடி ரூபாய் அளவிலான விலை கட்டுப்படுத்தும் நிதியம்

* மாநகரங்கள் மற்றும் நகர்ப்புரப் பகுதிகளில் 530 அம்மா உணவகங்கள்

* நியாயமான விலையில் மருந்துகளை விற்பதற்காக 106 அம்மா மருந்தகங்கள்

* அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்ற புதுமையான திட்டங்கள்

* தமிழ்நாட்டை மின் பற்றாக்குறை நிலையிலிருந்து மீட்டெடுத்து, மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை, முதல்வர் ஜெயலலிதாவையே சேரும்.என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.