தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

வெள்ளி, மார்ச் 04,2016,

தமிழகத்தில் ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல்தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஏப்ரல் 30ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும்,மனுவை திரும்பப் பெற மே 2ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அசாமில் 2 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.