தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன :பயனாளிகள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி

தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன :பயனாளிகள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி

திங்கள் , டிசம்பர் 28,2015,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில், 10,422 பயனாளிகளுக்கு 9 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விஸ்வநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த 3,890 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், 3,564 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ஆயிரத்து 673 பெண்களுக்கு 7 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியினை அமைச்சர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் வரகூராம்பட்டி ஊராட்சியில் 81 பயனாளிகளுக்கு 10 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா ஆடுகளையும், ஆதாரச் செலவினத்திற்காக ஆடுகளை பெற்ற பயனாளிகளுக்கு தலா 2 ஆயிரத்திற்கான காசோலையையும் அமைச்சர் திரு. P. தங்கமணி வழங்கினார்.
கோவை மாவட்டம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 6 ஆயிரம் பயனாளிகள் மற்றும் கெம்பட்டிகாலனி பகுதியை சேர்ந்த 6,378 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு. S.P.வேலுமணி வழங்கினார். பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த 396 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் கணபதி ப. ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் நடைபெற்ற அரசு விழாவில், ஆயிரத்து 465 குடும்ப அட்டைதாரர்களுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு. முக்கூர் என். சுப்பிரமணியன் வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.