தமிழகம் முழுவதும் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய காவல்துறை குடியிருப்பு கட்டடங்கள் – காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழகம் முழுவதும் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய காவல்துறை குடியிருப்பு கட்டடங்கள் – காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

திங்கள் , நவம்பர் 30,2015,

திருச்சி மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் 55 காவல்துறை குடியிருப்புகள் உள்பட தமிழகம் முழுவதும் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை மற்றும் சிறைத்துறை கட்டடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இன்று திறந்து வைத்தார்.

பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய உறுதுணையாக, கடமை உணர்வுடன் பணியாற்றும் காவலர்களின் நலன்களை பேணிக்காத்திடும் வகையில், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களின் அருகிலேயே குடியிருப்புகள் கட்டுதல், காவல்துறையினருக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 55 காவல்துறை குடியிருப்புகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகம் மற்றும் குருவிக்குளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 410 குடியிருப்புகள்; வேலூர் மாவட்டம் – வேலூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 96 குடியிருப்புகள்; தேனி மாவட்டம் போடி நகரத்தில் கட்டப்பட்டுள்ள 76 குடியிருப்புகள்; சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி, அன்னதானப்பட்டி மற்றும் மல்லூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 107 குடியிருப்புகள்; தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 51 குடியிருப்புகள்; ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கட்டப்பட்டுள்ள 50 குடியிருப்புகள்; பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 30 குடியிருப்புகள்; காஞ்சிபுரம் மாவட்டம் ஊனமாஞ்சேரி மற்றும் உத்திரமேரூரில் கட்டப்பட்டுள்ள 37 குடியிருப்புகள்; திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் கட்டப்பட்டுள்ள 22 குடியிருப்புகள்; சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலம் மற்றும் தேவக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள 20 குடியிருப்புகள்; திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் கட்டப்பட்டுள்ள 16 குடியிருப்புகள்; கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் கட்டப்பட்டுள்ள 19 குடியிருப்புகள்; நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் கட்டப்பட்டுள்ள 13 குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள 11 குடியிருப்புகள் என 83 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 958 காவல் துறை குடியிருப்புகளையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் பொதத்தூர் பேட்டை; கடலூர் மாவட்டம் ஆலடி, புவனகிரி மற்றும் கடலூர் புதுநகர்; விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர், தியாகதுர்கம் விழுப்புரம் மேற்கு, பகன்டைகுட்டுச்சாலை, பிரம்மதேசம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு; திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மற்றும் செங்கம்; ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல்; திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி மற்றும் தாண்டிக்குடி; திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், குருவிக்குளம், விஜயநாராயணம் மற்றும் திருக்குரான்குடி; கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் பந்தய சாலை; சேலம் மாவட்டம் தம்மம்பட்டி; புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை; நீலகிரி மாவட்டம் காந்தல், சோளூர்மட்டம், வெலிங்டன் மற்றும் குன்னூர்; தேனி மாவட்டம் அல்லிநகரம் மற்றும் தென்கரை; ஈரோடு மாவட்டம் அரசலூர்; மதுரை மாவட்டம் மதிச்சியம் ஆகிய இடங்களில் 18 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 33 காவல் நிலையங்கள்; விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை; மதுரை மாவட்டம் மதுரை; திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி; நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் காந்தல் ஆகிய இடங்களில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை எழும்பூரில் 500 காவலர்களுக்கான தங்குமிடம்; புதுப்பேட்டையில் ஆயுதப்படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம், அண்ணா சதுக்கத்தில் கடலோரக் காவல் நிலையம், 20 கடலோரக் காவல்படையினருக்கான தங்குமிடம் மற்றும் அசோக் நகரில் காவல் பயிற்சியாளர்கள் பயிற்சி மையம்; நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் ஆயுதப்படை நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் 20 கடலோரக் காவல்படையினருக்கான தங்குமிடம், தரங்கம்பாடி மற்றும் புதுப்பட்டினத்தில் கடலோரக் காவல் நிலையங்கள்; புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் ஆயுதப்படை நிர்வாக அலுவலகக் கட்டடம்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவலர்களுக்கான பாசறை, ராமேஸ்வரத்தில் சிறப்புக் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம், கமுதியில் திருப்பி நிலையம், ஆற்றங்கரை மற்றும் வாலிநோக்கம் ஆகிய இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள்; தருமபுரி மாவட்டம் தருமபுரியில் 50 காவலர்களுக்கான பயிற்சி அறை; திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளியில் காவலர் சமூகநலக் கூடம் மற்றும் 200 காவலர்களுக்கான தங்குமிடங்கள்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் சோதனைச் சாவடி; கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரில் காவல் துணைக்கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு; காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 100 காவலர்களுக்கான தங்குமிடம்; மதுரை மாவட்டம் மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவல் துணைக்கண்காணிப்பாளர் குடியிருப்பு; சிவகங்கை மாவட்ட ஆயுதப் படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம்; அரியலூர் மாவட்டம் அரியலூரில் ஊர்க் காவல்படை அலுவலகக் கட்டடம்; தூத்துக்குடி மாவட்ட ஆயுதப் படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம்; என 27 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 இதர காவல்துறை கட்டடங்களையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் குடியிருப்புகள்; சிறைத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகம்; கடலூர் மாவட்டம் கேப்பர் மலை மத்தியசிறை வளாகம்; திருச்சிராப்பள்ளி மத்தியசிறை வளாகம்; கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகம்; ஆகிய இடங்களில் 11 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 சிறைத்துறையினருக்கான அலுவலர் குடியிருப்புகள் என மொத்தம் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை கட்டடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி, அரசு தலைமைச் செயலாளர் திரு.கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் திரு. அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் திரு. அசோக் குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.T.K.ராஜேந்திரன், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரும், சிறைத்துறைத் தலைவருமான திரு. எஸ். ஜார்ஜ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநருமான திரு. ஆர்.சி. குடாவ்லா, தமிழ்நாடு காலவர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. முகமது ஷகில் அக்தர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.