தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை கூடுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை கூடுகிறது

வெள்ளிக்கிழமை, மார்ச் 03, 2017,

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை நடைபெற உள்ளது.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின், அவரது தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின், 2017 – 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவது உட்பட, வேறு பல பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என  தெரிகிறது.