தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர் வீடு, வீடாக காலண்டர் விநியோகம்

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர் வீடு, வீடாக காலண்டர் விநியோகம்

வெள்ளி, ஜனவரி 08,2016,

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு, தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் தினசரி காலண்டரை தயார் செய்து தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று, வாக்குகள் மே மாதத்தில் எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கான ஆயத் தப்பணிகளில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேனி மாவட்ட அதிமுகவினர் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் 2016ம் ஆண்டின் தினசரி காலண்டரை தயார் செய்து வீடு வீடாக விநியோகம் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்துஅதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், அதிமுக அரசின் கடந்த நான்கரை ஆண்டுகள் சாதனைகளை பட்டியல் இட்டு நகராட்சி, பேரூராட்சி, ஊராட் சிகளில் வசிக்கும் மக்களுக்கு மாத காலண்டர் அட்டையில் பிரிண்ட் செய்து கொடுத்து வருகி றோம். தினமும் காலண்டரில் தேதியை மக்கள் கிழிக்கும்போது அதிமுக அரசின் சாதனைகளை பார்க்கும் வாய்ப்புள்ளது.அதனால், தேர்தலின்போது அதி முகவை மறக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.