தமிழக அரசின் சாதனைகள் குறித்து மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

தமிழக அரசின் சாதனைகள் குறித்து மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

புதன்,நவம்பர்,25-2015

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் மகத்தான சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, மதுரை மாவட்டம் ஒபுளா படித்துறையில், நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி – எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி, வரலாற்று சாதனை படைத்து வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., இனி ஒருபோதும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றும், தி.மு.க.வின் ஸ்டாலின் மேற்கொள்ளும் போலியான நடைபயணம், பொய்ப் பிரச்சாரங்கள், தமிழக மக்களிடையே எடுபடாது என்றும் அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பேராசிரியர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.