சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன் பேச்சு

சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே:  எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன் பேச்சு

வியாழன் , ஜனவரி 21,2016,

தமிழக அரசின் சாதனைகளே மீண்டும் வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என்றார் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன்.

திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் பேசியதாவது: சிறுபான்மையினருக்காக அதிக திட்டங்களைச் செயல்படுத்தியது அதிமுக அரசுதான். ஏற்றம்-இறக்கம் என்பவை அதிமுகவில் மிகவும் எளிது. சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கச் செய்வது தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே சாத்தியம். தமிழக அரசின் சாதனைகளை வீடுவீடாகச் சென்று சொல்ல வேண்டும். அரசின் சாதனைகள் அதிமுகவுக்கு மீண்டும் வெற்றியைத் தரும் என்றார் அவர்.

கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.முத்துக்கருப்பன், அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், பகுதிச் செயலர் என்.மோகன், தொகுதிச் செயலர் பால்கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் மேலப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பகுதிச் செயலர் ஹயாத் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் சேகர் பேசினார். நிர்வாகிகள் எம்.ஹெச்.பீர்முகம்மது, சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.