தமிழக அரசின் சாதனை விளக்க வாகனம்:அமைச்சர் வீரமணியிடம் வாகனத்தின் சாவியை முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்படைத்தார்

தமிழக அரசின் சாதனை விளக்க வாகனம்:அமைச்சர் வீரமணியிடம் வாகனத்தின் சாவியை முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்படைத்தார்

திங்கள் , ஜனவரி 18,2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, கழக அரசின் மகத்தான சாதனைகளையும், எண்ணற்ற நலத்திட்டங்களையும் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், பிரச்சாரப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள, வேலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பிரச்சார வாகனத்தின் சாவியை, அமைச்சர் திரு. K.C. வீரமணியிடம் வழங்கினார்.

தமிழ்நாட்டில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கழக அரசு செயல்படுத்தி வரும் புரட்சிகரமான பல்வேறு திட்டங்கள் பற்றிய முழுமையான விழிப்புணர்ச்சியை மக்கள் அனைவரும் பெற்றிடும் வகையிலும், ஒளிபரப்பப்படும் படக்காட்சிகளை எந்த கோணத்திலிருந்தும் மக்கள் ஒரே நேரத்தில் துல்லியமாக கண்டு, ஒலி, ஒளி காட்சிகள் மூலம் தகவல்களை பெறும் வகையிலும், வேலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், அதிநவீன வசதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தின் சாவியை, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, இன்று, வேலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான திரு. K.C. வீரமணியிடம் வழங்கி, கழக அரசின் சாதனைகளை மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிரச்சாரப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.