தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி

வெள்ளி, மார்ச் 04,2016,

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில், கருவுற்ற தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயிலில் கருவுற்ற தாய்மார்கள் 150 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு வகை வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது. அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சமுதாய வளைகாப்புக்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு 3 சக்கர சைக்கிள், சக்கரநாற்காலி, ஊன்றுகோல் போன்றவற்றை அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிள் கலந்துகொண்டனர். தங்கள் நலனில் அக்கறை கொண்டு உதவிகள் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.