தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக குமரி மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் நியமனம்

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக குமரி மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் நியமனம்

ஞாயிறு, மார்ச் 5, 2017 ,

நாகர்கோவில் :  டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். கேபினட் அந்தஸ்து கொண்ட இந்த சிறப்பு பிரதிநிதி பதவிக்கு தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட்டு பணிகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுவார். தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும் அதிகாரத்தையும் அவர் பெறுவார்.
கன்னியாகுமரியில் அதிமுக வுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இல்லாத நிலை யில், கேபினட் அந்தஸ்து கொண்ட இப்பதவி குமரி மாவட் டத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.