தமிழக அரசு மாண்புமிகு அம்மா ஜெயலலிதா வழியில் செயல்படும் ; முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் உறுதி

தமிழக அரசு மாண்புமிகு அம்மா ஜெயலலிதா வழியில் செயல்படும் ; முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் உறுதி

வெள்ளி, ஜனவரி 27, 2017,

தமிழக அரசு மறைந்த மாண்புமிகு அம்மா ஜெயலலிதா அவர்கள்  வழியில் செயல்படும் என முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் உறுதி பட தெரிவித்தார் 

தமிழக சட்டப்பேரவையில் இன்று, ஆளுனர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றபோது, அதில் பேசிய முதலமைச்சர் திரு. ஒ.பன்னீர்செல்வம், காவேரி நதிநீர் விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளிவரச் செய்தவர் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா என்று புகழாரம் சூட்டினார். அம்மா வழியில் செயல்படும் அரசு, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றைப் பெற்றுத்தரும் என்றும் அப்போது  முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.