தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக ரூ. 940 கோடி வெள்ள நிவாரண நிதி பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று,  முதல்கட்டமாக ரூ. 940 கோடி  வெள்ள நிவாரண நிதி பிரதமர் மோடி அறிவிப்பு

23 November 2015

 

                  தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக, பல மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட உயிர் பலி மற்றும் சேதங்களுக்கு நிவாரண நிதியாக உடனடியாக தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

                    கடிதத்தில்,தமிழகத்தில் உடனடி வெள்ள நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும், 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் தேவைப்படுவதாக  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா,எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று,தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.940 கோடியை ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு ஒன்றை அனுப்பவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்கு அடுத்தகட்டமாக வெள்ள நிவாரண நிதி ஒதுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.