தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை

புதன்கிழமை, அக்டோபர் 05, 2016,

தமிழக முதல்வர் உடல்நலம் குணம் பெற்று விரைவில் பணிக்கு திரும்பவேண்டி நெல்லை டவுன் பாட்டபத்து நர்சரி பள்ளியில் மாணவ, மாணவிகள் சிறப்பு கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர் மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில் சேலம் செவ்வாய்பேட்டை லீ பஜார் சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவிலில் தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி, ஆயிரம் அகல் விளக்கு எற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கபட்டது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கஜ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர். மேலும் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கிய அவர்கள், முதல்வர் நலம் பெற வேண்டி 100 தேங்காய்களையும் உடைத்தனர்.

கழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள யோகநரசிம்ம பெருமாள் கோயிலில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், அபிஷேகமும் நடைபெற்றன. இதில், கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பூந்தமல்லி, கோரிமேடு பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட கழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.