தமிழக விளையாட்டுத்துறையை தேசிய, சர்வதேச அளவில் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளின் பயனாக சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டிகள்

தமிழக விளையாட்டுத்துறையை தேசிய, சர்வதேச அளவில் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளின் பயனாக சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டிகள்

தமிழக விளையாட்டுத்துறையை தேசிய, சர்வதேச அளவில் உயர்த்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளின் பயனாக, சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக வீரர்கள் உள்ளிட்ட இந்திய அணியுடன் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பு… தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பதக்கங்களைப் பெறவும், உடல் மற்றும் மன வலிமையை அடையவும் வழிவகுக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் வண்ணம் தங்கள் திறனை உயர்த்திக்கொள்ள அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதன் பயனாக 7வது முறையாக சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா, ஐக்கிய அரபு நாடுகள், கிரீஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த 167 பேர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 40 பேர் கலந்துகொண்டுள்ளனர். Optimist, Laser, Laser Radious, 29-ER உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து தகுதிபெறும் 4 வீரர்கள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அறிவித்துள்ளபடி, Champion Development திட்டத்தில் தகுதிபெறுவோருக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

ஆசிய அளவில் பங்கேற்று பரிசுபெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் எனவும், தன்னைப்போன்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு, உந்துசக்தியை ஏற்படுத்துவதாகவும், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள பாய்மரப் படகு வீராங்கனை ஐஸ்வர்யா, பெருமிதம் தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா பாய்மரப் படகுப் போட்டிக்காக நிலமும், நிதியும் ஒதுக்கி இருப்பதாகவும், அதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறுவதாக பாய்மரப்படகு கிளப் மற்றும் மேம்பாட்டு கமிட்டியின் தலைவர் திரு. அசோக் ஆர். தாக்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பாய்மரப்படகுப் போட்டியை, சென்னை துறைமுகப் பகுதியில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் செய்துள்ளது.

விளையாட்டுத்துறையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட முன்னோடி திட்டங்கள் காரணமாக ஏ.டி.பி. டென்னிஸ், ஃபிடே சதுரங்கம், கால்பந்து, பாய்மரப் படகு போட்டிகள் என சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான மையமாக நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல…