வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக ஜனாதிபதி பிரணாப் பிரார்த்தனை!: தமிழக அரசின் மீட்பு பணிகளுக்கு பாராட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக ஜனாதிபதி பிரணாப் பிரார்த்தனை!: தமிழக அரசின் மீட்பு பணிகளுக்கு பாராட்டு

வியாழன் , டிசம்பர் 03,2015,

 

புதுடெல்லி: சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் வருத்தமளிக்கிறது என்றும், கடினமான நேரத்தில் தமிழக மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
                                               இது குறித்து தனது ட்விட்டரில், “சென்னையில் பெரு வெள்ளத்தால், உயிர்சேதமும் பெருமளவு உள்கட்டமைப்புகளும் சேதம் அடைந்தது வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் தமிழக மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். வெள்ள பாதிப்புகளை மனோதிடத்துடன் தமிழக மக்கள் எதிர்கொண்டு மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாநில அரசும், அனைத்து துறைகளும் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு வீச்சில் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு மேற்கொண்டுவரும் நிவாரண பணிகளை பாராட்டுகிறேன். இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.