தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் இடம் பிடித்த 7 மாணவ – மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் இடம் பிடித்த 7 மாணவ – மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

சனிக்கிழமை, மார்ச் 04, 2017,

சென்னை : 2015-2016-ம் கல்வியாண்டில் 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவ – மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.பிறமாவட்டங்களைச் சார்ந்த மாணவ-மாணவியர்களுக்கு அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் காசோலைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இது குறித்து,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பள்ளிக்கல்வித் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுதிட்டத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்று 2015 2016ம் கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழை ஒரு மொழிபாடமாகக் கொண்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற 21 மாணவ-மாணவியருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய்க்கானகா சோலைகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 22 மாணவ-மாணவியருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளும், அதே போன்று 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 424 மாணவமாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.

அவற்றில் தற்போது, சென்னை மாவட்டதைச் சார்ந்த 7 மாணவ மாணவியர்களுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.பிறமாவட்டங்களைச் சார்ந்த மாணவ-மாணவியர்களுக்கு அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் காசோலைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இந் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி. எஸ். வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.