தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

புதன், மார்ச் 02,2016,

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் இதற்கான விழா நடைபெற்றது.

அடுக்குமாடி குடியிருப்புகளின் விவரம்:

சென்னை பார்த்தசாரதி நகர் திட்டப் பகுதியில் 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணிமுத்து திட்டப் பகுதியில் 392 குடியிருப்புகள், நேரு பார்க் திட்டப் பகுதியில் 288 குடியிருப்புகள், லாக் நகர் திட்டப் பகுதியில் 304 குடியிருப்புகள், அண்டிமான்ய தோட்டப் பகுதியில் 48 குடியிருப்புகள், நாவலூரில் 2,048 குடியிருப்புகள், கோவையில் 224 குடியிருப்புகளும், சூலூரில் 240 குடியிருப்புகளும், ஈரோடு சூரியம்பாளையம் திட்டப் பகுதியில் 204 குடியிருப்புகள் என மொத்தம் 4,044 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதாதிறந்து வைத்தார்.