தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம், சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம், சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடங்களை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சமுதாயம் நலமாக அமையவும், நலமுள்ள மனிதனும், வளமுள்ள நாடும் உருவாகவும் இன்றியமையாததாக விளங்கும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாகவும் முனைப்பான பல திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்த அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 6,308 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 6,243 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 6,296 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 5,800 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 5,444 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், தஞ்சாவூர் சிட்கோ தொழில் வளாகத்தில், 5,780 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;

புதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் 6,241 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம் என மொத்தம் 10 கோடியே 64 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடங்களில், தரைதளத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தொழில்நுட்பப் பிரிவுக்கான அறைகள், நிர்வாகம் மற்றும் கணக்கு பிரிவுகளுக்கு பொதுக் கூடம், வரவேற்பாளர் அறை, முதல் தளத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம், ரசாயனங்களை வைப்பதற்கான தனி அறை, கழிவு நீர் மாதிரிகளை வைப்பதற்கான தனி அறை, காற்று மாதிரிகளை பரிசோதிப்பதற்கு தனி அறை, கழிவுநீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யும் கூடம், விஞ்ஞானிகள், பணியாளர்களுக்கான தனி அறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கேற்ப சாய்வு தளம், வாகனங்கள் நிறுத்துமிடம், பாதுகாவலர் அறை, பொதுமக்கள் வசதிக்காக இருக்கைகள், குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான திரு கி. ஸ்கந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.