வணிகர் சங்க பேரவைத் தலைவர், நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, சந்தித்து வரும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்

வணிகர் சங்க பேரவைத் தலைவர், நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, சந்தித்து வரும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்

திங்கள் கிழமை,மார்ச் 14,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பதற்கு, தங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, கோரிக்கை மனுவையும் வழங்கினார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த. வெள்ளையன், வர்த்தகர்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. R. நாகராஜன், பேரவை துணைத் தலைவர் திரு. P.V. கருணாகரன், வட சென்னை மாவட்டத் தலைவர் திரு. வியாசை M. மணி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் திரு. ப. தேவராஜ், தென் சென்னை மாவட்டத் தலைவர் திரு. S. செளந்திரராஜன், இணைச் செயலாளர் திரு. அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வுக்காக அயராது பாடுபடும் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, வரும் மே மாதம் 16-ம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு தங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, கோரிக்கை மனுவை வழங்கினர்.