“தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல்” நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது

“தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல்” நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது

புதன், பெப்ரவரி 03,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்கள் குறித்து எழுதப்பட்ட “தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல்” நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் நாட்டிற்கே முன்னோடியாகத் திகழும் வகையில், முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா செயல்படுத்தி வரும் ஏழை-எளியோருக்கான நலத்திட்ட உதவிகள், “தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்-2023” உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் குறித்து, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “Amma Model of Development in Tamilnadu” என்ற நூல், “தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல்” என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்நூலின் முதல் பிரதியை பத்மஸ்ரீ திரு. நல்லிகுப்புசாமி செட்டி வெளியிட, செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தினத்தின் முன்னாள் பதிவாளர் முனைவர் பேராசிரியர் திரு. எம். முத்துவேலு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், இந்நூலை ஆங்கிலத்தில் எழுதிய முனைவர் திருமதி சி.கே. கரியாலி, முனைவர் எஸ்.கே. வெற்றிவேல் மற்றும் தமிழில் மொழியாக்கம் செய்த முனைவர் நா. முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.