தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்குக் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்குக் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

புதன், பெப்ரவரி 17,2016,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்ததையும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதுவரை எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.