தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 9 அறிஞர்களுக்கு விருதுகள்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 9 அறிஞர்களுக்கு விருதுகள்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜனவரி 13,2016,

தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்றிதழ் ஆகியன வழங்கப்படும்.

விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம்;

1. திருவள்ளுவர் விருது – 2016 : முனைவர் வி.ஜி. சந்தோசம்
2. தந்தை பெரியார் விருது – 2015 : வி.ஆர். வேங்கன், தருமபுரி
3. அண்ணல் அம்பேத்கர் விருது-2015 : எ. பொன்னுசாமி
4. பேரறிஞர் அண்ணா விருது – 2015 : பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா பாப்பா காரைக்குடி
5. பெருந்தலைவர் காமராசர் விருது – 2015 : மருத்துவர் இரா. வேங்கடசாமி, காந்தி நிகேதன், தே. கல்லுப்பட்டி
6. மகாகவி பாரதியார் விருது – 2015 : கவிஞர் பொன்னடியான்
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது – 2015 : முனைவர் வீ. ரேணுகாதேவி, மதுரை
8. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – 2015 : கி. வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – 2015 : இரா.கோ. இராசாராம், மதுரை.

விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 46 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.