தம்மம்பட்டி பேரூராட்சியில், 6390 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர், மின்விசிறி வழங்கினார் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தம்மம்பட்டி பேரூராட்சியில், 6390 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர், மின்விசிறி வழங்கினார் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திங்கள் , பெப்ரவரி 08,2016,

தம்மம்பட்டி பேரூராட்சியில் நேற்று விலையில்லா மிக்சி கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்று பேசினார். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவன் கள்ளகுறிச்சி தொகுதி எம்பி காமராஜ் அரசின் சாதனைகளை பற்றி விளக்கி பேசினார்.

தமிழக நெடுங்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் பழனிசாமி அதிமுக அரசின் சாதணைகளை பற்றி பேசினார். அதணைத் தொடர்ந்து விலையில்லா மிக்சி கிரைண்டர், மின்விசிறி என்று 6390 பயனாளிகளுக்கு 3.28 கோடிக்கு விலையில்லா இலவச பொருட்கள் ஆகியவற்றை வழங்கி அமைச்சர் பழனிசாமி வழங்கினார். முன்னதாக செந்தாரப்பட்டியில் இருந்து தம்மம்பட்டி வழியாக பழனிக்கும் , பெரம்பலுர்க்கும் புதியதாக பேருந்தை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து பேருந்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றி உள்ளார். கெங்கவல்லி சட்ட மன்ற தொகுதியில் நான்கு ஆண்டு காலத்தில் சாலை 164.10 கிலோ மீட்டர் 74 கோடியில் சீரமைக்கப்படுகிறது.

தற்போது 2015–2016 ஆண்டு காலத்தில் 52 கிலோ மிட்டர் தூரத்திற்க்கு 27 கோடி நிதி ஓதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் துவங்க இருக்கிறது.இவ்வாறு அமைச்சர் எடப்பாடி பழனிசாமிபேசினார்.