தர்மம் வெல்லும் : ஆளுநரை சந்தித்த பின் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

தர்மம் வெல்லும் : ஆளுநரை சந்தித்த பின் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

வியாழக்கிழமை, பிப்ரவரி 09, 2017,

சென்னை: ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று கூறினார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான சந்திப்பின்போது, தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ததாகவும், அதனை தற்போது திரும்பப் பெறுவதாகவும், சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்றும் கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் இல்லம் திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வம் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், இங்கு வந்திருக்கின்ற அம்மாவின் உடன்பிறப்புகள், இளைஞர்கள், மகளிர் அணியினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்துப் பேசினேன். உறுதியாக நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும். மீண்டும் ஒருமுறை, நல்லது நடக்கும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று கூறினார்.