தலைமைக் கழகப் பேச்சாளர் மற்றும் கழகச் செயலாளர் மரணம் : முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

தலைமைக் கழகப் பேச்சாளர் மற்றும் கழகச் செயலாளர் மரணம் : முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

23 november 2015

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைமைக் கழகப் பேச்சாளரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவருமான திரு.காஞ்சி A.வீரமணி உடல் நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு திரு.காஞ்சி வீரமணி, தலைமைக் கழகப் பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளையும், கழக அரசின் சாதனைகளையும் எதிர்க்கட்சியினரின் பொய்ப் பிரச்சாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அன்புச் சகோதரர் திரு.காஞ்சி வீரமணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், வடசென்னை தெற்கு மாவட்டம், துறைமுகம் பகுதிக் கழகச் செயலாளர் திரு.M.P. இருசப்பன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மரணமடைந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு திரு.இருசப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.