தான் பெற்ற அதிகாரத்தை அதிகமானோர் பெற வகை செய்தவர் : முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழிசை பிறந்த நாள் வாழ்த்து!

தான் பெற்ற அதிகாரத்தை அதிகமானோர் பெற வகை செய்தவர் : முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழிசை பிறந்த நாள் வாழ்த்து!

வியாழன் , பெப்ரவரி 25,2016,

சென்னைதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இன்று 69வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு பெண் அரசியல் வாதியாக தான் பெற்ற அதிகாரம் அதிக பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 50% உள்ளாட்சி அதிகாரத்தை பெண்களுக்கு வழங்கிய நிலையில் இந்த பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிப்பதில் மகிழ்கிறேன், உடல் ஆரோகியத்துடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.