தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவிகள் நன்றி

தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவிகள் நன்றி

வியாழன் , மார்ச் 10,2016,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதியில், 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மாணவிகள், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வழங்கி வருவதால், கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. மலைக்கிராமப்புற ஏழை-எளிய மாணவ, மாணவிகளும் சிறப்பான கல்வி பெறும் வகையில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தங்கும் அறைகள்போல் அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதி, சிக்கள்ளியில் 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில், மாணவியர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. விசாலமான அறைகள், கட்டில், மெத்தை, தலையணை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான உணவுகள் மற்றும் நூலகம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மாணவிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.