திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி – பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி – பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

சனி, டிசம்பர் 26,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. விலையில்லா நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பொதுமக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அமைச்சர் திரு. நத்தம் ஆர்.விசுவநாதன், 7,387 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை என 4 கோடியே 69 லட்சம் ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. உதயக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். ஏழை எளியோரின் இல்லத் திருமணம் மிக சிறப்பாக நடைபெற தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவிகளை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் விழாவில் 884 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவி என 3 கோடியே 38 லட்சம் ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு. முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் திரு. அ.ஞானசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவிகளைக் பெற்றுக் கொண்ட பயனாளிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.