தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

திங்கட்கிழமை, பிப்ரவரி 15, 2016,

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. வரும் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் நாளை தாக்கல் செய்கிறார். நடப்பு நிதியாண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.