திமுக ஆட்சியின் வேலை வாய்ப்பு குறித்து விவாதிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி சவால்

திமுக ஆட்சியின் வேலை வாய்ப்பு குறித்து விவாதிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி சவால்

ஞாயிறு, ஜனவரி 31,2016,

கடந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய அதிமுக ஆட்சியிலும் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் குறித்தும், அவற்றின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் குறித்தும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க தயாரா? என தொழில்துறை அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.