திமுக தொண்டர்களை அதிர வைத்த கருணாநிதி:தொண்டர்கள் உற்சாகம் இழப்பு

திமுக தொண்டர்களை அதிர வைத்த கருணாநிதி:தொண்டர்கள் உற்சாகம் இழப்பு

சனி, ஜனவரி 30,2016,

சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பவர்கள் அதற்கான கட்டணமாக ரூ.25 ஆயிரம் கட்ட வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனு அளிப்பவர்கள் ரூ 11 ஆயிரம் கட்டினால் போதுமானது என அதிமுக அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில், எதிர்க் கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த திமுக, சட்ட மன்றத் தேர்தல் போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனு அளிக்க ரூ 25 ஆயிரம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும், திமுகவை பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் நல்ல நெருக்கத்தில் உள்ளவர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதால், அடிமட்ட திமுக தொண்டர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.