திருக்கோவிலூரில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் ப.மோகன் நேரில் ஆய்வு

திருக்கோவிலூரில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் ப.மோகன் நேரில் ஆய்வு

வியாழன் , ஜனவரி 28,2016,

திருக்கோவிலூரில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் மோகன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நகரமாக திருக்கோவிலூர் இருந்து வருகிறது. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கென ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கட்டுமான பணிகளின் நிலை குறித்து அமைச்சர் ப.மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடந்து வரும் பணிகள் குறித்து குறித்து ஒப்பந்ததாரர் எஸ்.பாரதி அமைச்சர் ப.மோகனிடம் விளக்கி கூறினார். இதைக்கேட்ட அமைச்சர் ப.மோகன் பணிகளை தரமான முறையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி குறிப்பிட்ட காலத்தில் முடித்து தரவேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆய்வின் போது விழுப்புரம் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கதிர்.தண்டபாணி, வருவாய் கோட்டாட்சியர் பாரதிதேவி, தமிழக கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, தொழில் அதிபர் எஸ்.கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.பார்த்தசாரதி, திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி, நகர செயலாளர் கே.சுப்பு, பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.ஆர்.சம்பத், என்.ஜெயபால், ஜி.ரவிக்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஏ.சந்தோஷ், முகையூர் ஒன்றிய செயலாளர் சேவல்.கோதண்டராமன், மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிச்சாமி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.இளவரசன், முகையூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அய்யனார், ஒன்றிய கவுன்சிலர்கள் அயோத்தி, வெற்றிச்செல்வன், அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.