திருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூங்கா, மீட்கப்பட்டு நவீனமுறையில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு!

திருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூங்கா, மீட்கப்பட்டு நவீனமுறையில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு!

செவ்வாய், பெப்ரவரி 23,2016,

திருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரெங்கநாதன் பூங்கா, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து மீட்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்துவைக்கப்பட்டது.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது, திருச்சி பீரங்கிகுளத்தெரு பகுதியில் உள்ள 5 கோடி ரூபாய் மதிப்புடைய ரெங்கநாதன் பூங்கா உள்ளூர் தி.மு.க.வினரால், ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பொழுதுபோக்கு பூங்காவை மீட்க கோரி திருச்சி மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, பூங்கா மீட்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் ஒதுக்கீடு செய்த 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 18 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, போர்கால அடிப்படையில் புனரமைக்கப்பட்டன. குழந்தைகளுக்கான ஊஞ்சல், முதியோர் நடைபாதை, புல்தரை உள்ளிட்டவை அழகுற அமைக்கப்பட்டதையடுத்து, தற்போது இந்த பூங்கா புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று பூங்கா திறந்துவைக்கப்பட்டதையடுத்து, மகிழ்ச்சியடைந்துள்ள பொதுமக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.