திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் : சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் : சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015,

பொங்கல் பண்டிகைக்காக திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் கண்டுள்ளன. சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, தொடங்கி வைத்த சிறை அங்காடிகளில் கைதிகள் தயாரிக்கும் சோப்பு, சோப்புத்தூள், ரெடிமேடு ஆடைகள், இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட உணவு வகைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 280 கைதிகளுக்கு 65 ஏக்கர் பரப்பளவில் தோட்டம், வயல்வெளி, தென்னந்தோப்பு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கறவைமாடுகள், கோழி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்கள், கோழி, மீன், இனிப்பு வகைகள், சிறை அங்காடிகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அங்காடிகளையும் கைதிகளே நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்காக சிறை வளாகத்தில் செங்கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. ஈரோட்டிலிருந்து பெறப்பட்ட தாய்மஞ்சளைக் கொண்டு நேரடியாகவும், வாழைக்கு ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டுள்ளன. தினந்தோறும் வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்களில் கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நெல், கரும்பு, காய்கறி உள்ளிட்டவைகளும் பயிரிடப்பட்டுள்ளன. இதனால், சிறைக் கைதிகள் பயனடைந்து வருகின்றனர்.முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த இந்தத் திட்டம் சிறைக் கைதிகள் எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் சிறப்பாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.