திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக, நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக, நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக, தாமிரபரணி ஆற்றின் கீழ் உள்ள வாய்க்கால்கள் மூலம் பயன்பெறும் பாசன பரப்பிற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் 11 கால்வாய்களின் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட தாம் ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.