திருநெல்வேலி முகைதீன் ஆண்டவர் தர்காவில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியர்கள் நன்றி

திருநெல்வேலி முகைதீன் ஆண்டவர் தர்காவில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியர்கள் நன்றி

ஞாயிறு, மார்ச் 27,2016,

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் தர்காவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டதால் மகிழ்ச்சியடைந்துள்ள இஸ்லாமியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டல்புதூரில், முகைதீன் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இதனை தமிழக அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்தது. இந்த தர்காவிற்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வருகை தருகின்றனர். இந்நிலையில், தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தேவைக்காக, அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சிமெண்ட் சாலை, காத்திருப்போர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 80 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்து கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த இஸ்லாமியர்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.