திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் இடையே மோதல்

திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் இடையே மோதல்

செவ்வாய், நவம்பர் 01,2016,

மதுரை திருப்பரங்குன்றம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

அழகிரி தி.மு.க.விலிருந்து ஒதுக்கப்பட்டதிலிருந்து ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதனால், அழகிரி ஆதரவாளர்கள், ஸ்டாலின் மீது கோபத்துடன் இருப்பதோடு, பல்வேறு பகுதிகளில் இருதரப்பினருக்கும் இடையே மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் தனுத்தாக்கல் செய்ய வந்தபோது, ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.