திருவாரூர் மாவட்டத்தில்,பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஆர். காமராஜ் நேரில் ஆய்வு:முதலமைச்சர் அறிவித்தபடி நிவாரண உதவிகளையும் வழங்கினார்

திருவாரூர் மாவட்டத்தில்,பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்  ஆர். காமராஜ் நேரில் ஆய்வு:முதலமைச்சர் அறிவித்தபடி நிவாரண உதவிகளையும் வழங்கினார்

வியாழன் , டிசம்பர் 10,2015,

திருவாரூர் மாவட்டத்தில், கடந்த ஒருவாரகாலமாக பெய்த தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காவேரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பாசன மாவட்டமான திருவாரூரில், கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் மழை காரணமாக, 69,213 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் நீரால் சூழப்பட்டன. இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைக்கிணங்க, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மழை காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அமைச்சர், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றுவருவதை பார்வையிட்டு, மழையால் தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு மருந்துகளையும் அமைச்சர் திரு. ஆர். காமராஜ் வழங்கினார்.