திருவாரூர் விவசாயிகளுக்கு வறட்சி நிதியாக ரூ. 179 கோடி ஒதுக்கீடு : உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

திருவாரூர் விவசாயிகளுக்கு வறட்சி நிதியாக ரூ. 179 கோடி ஒதுக்கீடு : உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017,

திருவாரூர் : திருவாரூரில் வறட்சி நிவாரண நிதியாக 179 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், மருத்துவ காப்பீடு மூலம் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை தரப்படுகிறது என்றார். மருத்துவத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்திய அரசு, மக்களின் தேவைகளை அறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக கூறினார். திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் வறட்சி நிவாரண நிதியாக 179 கோடியே 27 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.